தொடங்கியது இராணுவ வேட்டை:சிங்கள மாணவ தலைவர் கைது!
இரத்மலானையில் உள்ள சிரசா தொலைக்காட்சி ஸ்டுடியோவில் இருந்து ஒளிபரப்பப்பட்ட கல்வி,நிகழ்வில் பங்கெடுத்துவிட்டு வெளியே வந்த மாணவ தலைவர் அவிசாந்த முதலிகே கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கை இராணுவத்தின் கல்வி மற்றும் சிவில் நிர்வாக தலையீடுகள் தொடர்பான கலந்துரையாடலில் பங்கேற்க வந்தவேளை சிறிது நேரத்திற்கு முன்பு சிரசா நிறுவனத்தை சுற்றியுள்ள இலங்கை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
உயர் கல்வியில்; இராணுவமயமாக்கல் குறித்த தொலைக்காட்சி பேச்சு நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு, ரத்மலானையில் உள்ள சிரச தொலைக்காட்சி நிலையத்தின் ஸ்டுடியோவை விட்டு வெளியேறும்போதுமாணவ தலைவர் அவிசாந்த முதலிகே சிறிது நேரத்திற்கு முன்பு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டதாக மாணவர் கூட்டமைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
Post a Comment