பருத்திதுறையில் நெருக்கடி!

பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட மந்திகை பொதுச் சந்தை மூடப்பட்டுள்ளது.

நேற்று மந்திகை சந்தை வியாபாரிகள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்தே மந்திகை சந்தை மூடப்பட்டுள்ளது.

இதில் ஒருவர் துன்னாலை பகுதியைச் சேர்ந்தவர் எனவும் மற்றவர் அச்சுவேலி பகுதியைச் சேர்ந்தவர் எனவும் தெரியவந்துள்ளது.

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சையில் கடமையாற்றும் தாதி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பருத்தித்துறை நாவலர் வீதி  முருகன் கோயிலடி பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய பெண் தாதி ஒருவருக்கே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நோய் அறிகுறிகள் தென்பட்டதையடுத்து பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற போதே அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது அவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் கொரோனா தொற்று பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ளார்.


No comments