புதையல்! கிளிநொச்சியில் நால்வர் கைது!!


கிளிநொச்சி மாவட்டத்தில தர்மபுரம் காவல்துறைப் பிரிவுக்கு உட்பட்ட அழகாபுரி பகுதியில் புதையல் தோண்ட முயற்சித்தார்கள் என்ற குற்றச்சாட்டில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்று இரவு 8.15 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய குறித்த பகுதியில் காவல்துறையினர் மற்றும் இராணுவத்தினர் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது சந்தேக நபர்கள் நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதானவர்களில் வவுனியாவைச் சேர்ந்த இருவரும், யாழ்ப்பாணம், விசுவமடுப் பகுதிகளைச் சேர்ந்தவர்களும் உள்ளதாக தர்மபுரம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கைதானவர்களிடம் இருந்து புதையல் இருப்பதைக் கண்டுபிடிப்பதற்கு பயன்படுத்தப்படும் ஸ்கானர் கருவி ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் தர்மபுரம் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். கைதானவர்கள் நாளை நீதிமன்றில் முற்படுத்தப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments