மூதூரில் வெடிபொருட்களுடன் ஒருவர் கைது!!


திருகோணமலை மூதூர், சந்தனவெட்டைப் பகுதியில் வெடிபொருட்களுடன் ஒருவரை இன்று (08) மூதூர் பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.

டைனமைற் குச்சிகள் 07 ,டெட்டனேட்டர் குச்சிகள் 03, 08 அடி நீளமுள்ள வயர் போன்றவற்றுடன் மூதூர் – சந்தனவெட்டைப் பகுதியைச் சேர்ந்த 38 வயதுடையவரே சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மூதூர் காவல்துறையினருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலில் குறித்த பகுதியில் உள்ள வீதியில் வைத்து அவரை சோதனைக்கு உட்படுத்தியபோதே வெடிபொருட்களுடன் சந்தேக நபர் கைது செய்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் காவல்துறையினரின் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன் இவரை மூதூர் நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்பத்த ஏற்பாடுகளை மூதூர் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments