மாமங்கத்திற்குப் பூட்டு!! ஆலய நிர்வாகத்திற்கு எதிராக வழக்கு!!


மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர்  ஆலய நிர்வாக உறுப்பினர்கள் 5 பேருக்கு எதிராக தனிமைப்படுத்தல் மற்றும் நோய்த்தடுப்பு சட்டத்தின் கீழ் அதிகளவானோரை ஒன்று கூட்டியமை, முகக்கவசம் அணியாமை, சமூக இடைவெளியினை பேணாமை மற்றும் அறிவுறுத்தல்களை மீறியமை ஆகிய குற்றங்களுக்காக இன்று மாவட்ட சுகாதார பகுதியினரால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

இதன்போது  மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏசீ.றிஸ்வான்  ஒவ்வொருவருக்கும் தலா ரூ.20,000/=ரூபாவை அபராதமாக விதித்தார். அத்தோடு, குறித்த நிர்வாகிகளும் கோயிலும் இன்று முதல் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஈ.உதயகுமார் தெரிவித்தார்.நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலய வருடாந்த உற்சவ தீர்த்தோற்சவத்தில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

No comments