கொத்தலாவலவை பின்னால் போட்டார் கோத்தா!

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் சட்டமூலம் தொடர்பான விவாதம் எதிர்வரும் வெள்ளிக்கிழமையன்று (06) இடம்பெறாது என அமைச்சர் சமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

தெற்கில் அதிகரித்துவரும் நெருக்கடிகளையடுத்து இம்முடிவிற்கு அரசு வந்துள்ளது.

இதனிடையே யாழ்ப்பாணத்தில் ஆசிரிய சங்கத்தின் ஏற்பாட்டில் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் சட்டமூலத்திற்கு எதிராக வாகனப்பேரணியொன்றிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

யாழ்.ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே ஆசிரிய சங்கம் இத்தகைய அறிவிப்பினை விடுத்துள்ளது.


No comments