ஆஸ்ரேலியாவில் முதல் முதலில் வீதிக்கு தமிழ்ப் பெயர் சூட்டப்பட்டது


ஆஸ்ரேலியா மெல்பேர்ணில் வீதி ஒன்றுக்கு தமிழ்ப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. குறித்த வீதி புகழ்பெற்ற கவிஞரான கவிக்கோ ரகுமானை மதிப்பளிக்கும் வகையில் கவிக்கோ வீதி (Kavikko Street) என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த வீதி மெல்ட்டன் (Melton) எனும் பகுதியிலுள்ள குருன்ஜங் (Kurunjang) வட்டாரத்தில் அமைந்துள்ளது.

குறித்த வீதிக்குத் தமிழ் பெயர் வருவவதற்கு அப்பகுதியில் எம்.ஏ.முஸ்தபா என்பராவார். இப்பகுதியில் பெருமளவு நிலங்கள் முஸ்தபாவுக்குச் சொந்தமானவை. அதனால் அவர் அப்பகுதியில் அமைந்த வீதிக்கு தமிழ் பெயர் ஒன்றை வைப்பதற்குத் தீர்மானித்து அரசாங்கத்திடம் விண்ணப்பித்திருந்தார். அதற்கு அவுஸ்ரேலிய அரசாங்கம் ஒப்புதல் வழங்கியுள்ளது இங்கே சுட்டிக்காட்டத்தக்கது.

No comments