யாழில் மாவட்ட செயலரும் தனியே!

 


கொரோனா தொற்று வடகிழக்கிலும் உச்சமடைந்துள்ள நிலையில் யாழ். மாவட்ட செயலர் க, மகேசன் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

யாழ்.மாவட்ட செயலகத்தில் பணியாற்றும் உத்தியோகஸ்தர் ஒருவருக்கு கொரோனோ தொற்று உறுதியானதை அடுத்து , தனிமைப்படுத்திக்கொண்டதுடன் மாவட்ட செயலர் , தனது உத்தியோக பூர்வ இல்லத்திலிருந்து பணிகளை ஆற்றி வருகின்றார். 

இதனிடையே யாழ்ப்பாணத்தில் நேற்று புதன்கிழமையும் மேலும் 5 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று உயிரிழந்த 5 பேருக்கே கொரோனாத்தொற்று உள்ளதாக அறிக்கையிடப்பட்டுள்ளது.


No comments