யாழ்.ஊடக அமைய உபதலைவர் லாபிர் பிரிவு!யாழ்ப்பாணத்தைப்பிறப்பிடமாகக்கொண்ட ஊடகவியலாளரும் எழுத்தாளருமான  கலாபூசணம் மீரா லெப்பை லாபிர்; இன்று ஞாயிற்றுக்கிழமை காலமானார்.

கலாபூசணம் ,தேசகீர்த்தி,தேச்சக்தி,ஊடகச்சுடர் ,நிழல்படத் தாரகை ஆகிய  விருதுகளைப் பெற்ற எம்.எல்.லாபிர் அவர்கள் யாழ்.ஊடக அமைய உபதலைவரும் முஸ்லிம் மீடியா போரத்தின், யாழ் மாவட்ட இணைப்பாளராகவும்,நவமணி,விடிவெள்ளி,வீரகேசரி,தமிழ் மிரர்,மெட்ரோ நியூஸ் ஆகிய பத்திரிகைகளின் செய்தியாளராகவும்  சேவையாற்றினார்.

மானிப்பாய் வீதி பெரிய முஹிதீன் ஜூம்மா பள்ளிவாசலின் நம்பிக்கையாளர் சபைத் தலைவராகக்கடமையாற்றிய லாபிர் அவர்கள்,பிளவ்ஸ் ஹாஜியார் பவுண்டேசன்  என்னும் அமைப்பின் மூலம் பல சமூகப்பணிகளை ஆற்றி  வந்தார்.

யாழ்.ஊடக அமையத்தின் பயணங்களில் தன்னை முழுமையாக இணைத்துக்கொண்ட லாபிர் 2019ம் ஆண்டில் ஊடகவிருது மூலம் கௌரவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.   


No comments