மக்களை வெளியேற்றிய விமானத்தில் பெண் குழந்தை பிறந்தது!!


ஆப்கானிஸ்தானில் தொடர்ந்து நிலவும் குழப்பங்களுக்கு மத்தியில் மக்கள் அமெரிக்க விமானம் மூலம் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் விமானத்தில் இடம்பெயர்து சென்றுகொண்டிருந்தபோது பெண் ஒருவர் விமானத்தில் பெண் குழந்தை பிறந்ததுள்ளது.

ஆப்கானிஸ்தான் கர்ப்பிணிப் பெண் ஜெர்மனியில் உள்ள ராம்ஸ்டீன் விமான தளத்திற்கு செல்லும் வழியில் பிரசவ வலி ஏற்பட்டதாக அமெரிக்க விமானப்படை தெரிவித்துள்ளது.

விமானம் தரையிறங்கிய பின்னர் விமானத்தில் ஏறிய மருத்துவ பணியாளர்கள் விமானத்தின் சரக்கு பெட்டியில் குழந்தையை பெற்றெடுத்தனர்.

அருகிலுள்ள மருத்துவ நிலையத்தில் குழந்தை மற்றும் தாய் இருவரும் நல்ல நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.

பயணத்தின் ஒரு கட்டத்தில், கர்ப்பிணிப் பெண்ணுக்கு சிக்கல்கள் ஏற்பட ஆரம்பித்தன. விமானத்தில் காற்று அழுத்தத்தை அதிகரிக்க விமானி கீழே இறங்க வேண்டியிருந்தது, இது தாயின் உயிரை நிலைநிறுத்தவும் காப்பாற்றவும் உதவியது என்று கூறப்பட்டுள்ளது.

No comments