கொழும்புத்துறையில் நீராடச் சென்றவர் சடலம் மீட்பு


யாழ். கொழும்புத்துறை உதயபுரம் கடலுக்கு நீராடச் சென்ற முதியவர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 5.30 மணியளவில் கடலுக்கு நீராடச் சென்ற இவர், நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாத நிலையில், காலை 8.30 மணியளவில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

அப்பகுதியைச் சேர்ந்த மனுவேல் செபஸ்டியன் என்ற 65 வயதான முதியவரே இவ்வாறு சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாண காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

No comments