இலங்கையில் நெருக்கடி:வீட்டிலிருந்தே சிகிச்சைஇலங்கையில்  நோய் அறிகுறிகளற்ற, அபாய நிலையில் இல்லாத கொரோனா நோயாளர்களை வீடுகளிலேயே தனிமைப்படுத்தும் நடவடிக்கையை எதிர்வரும் திங்கட்கிழமை (09) முதல் ஆரம்பிக்கவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

மேல் மாகாணத்தில் ஏற்கனவே இந்த திட்டம் நடைமுறையில் உள்ளதுடன், நாடளாவிய ரீதியில் எதிர்வரும் திங்கட்கிழமை (09) முதல் அமுல்படுத்தப்படவுள்ளது.

வீட்டில் உள்ள நோயாளர்களுடன் தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்டு ஆலோசனை வழங்கும் வகையிலான திட்டம் மேற்கொள்ளப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.

No comments