இலங்கை:சுடலையிலோ சவச்சாலையிலோ இடமில்லையாம்!

இலங்கையில் நாளாந்தம் கொவிட் தொற்றினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதன் காரணமாக மருத்துவமனைகளின் பிரேத அறைகளில் இட நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகனம் செய்யும் நடவடிக்கைகள் தகனசாலைகளில் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதால் இவ்வாறு உடல்கள்; அதிகளவில் வைத்தியசாலைகளில் தேங்கியுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் குறிப்பிடுகின்றன.

கொவிட் மரணங்கள் தவிர்ந்த ஏனைய காரணிகளில் மரணமானவர்களின் உடல்களும் தகனம் செய்யப்படுவதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

No comments