கஜேந்திரகுமாரிற்கும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கும் கொரோனா!


அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், தமிழ் தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களிற்கும் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தனக்கும், மனைவி மற்றும் மகளிற்கும் கொரோனா அறிகுறிகள் தென்பட்டதையடுத்து, இன்று காலை மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையிலேயே கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதனிடையே இலங்கையில் 225 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 146 பேர் மட்டுமே கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிகளைப் பெற்றுள்ளதாக தகவல் அறியும் உரிமை விண்ணப்பம் மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டம் 2021 பெப்பரி 16 ஆம் திகதி தொடங்கியது. எனினும் இப்போது வரை 146 எம்.பி.க்களுக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக பாராளுமன்ற தகவல் அறியும் உரிமை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி 122 எம்.பி.க்கள் நாரஹேன்பிட்டி இராணுவ வைத்தியசாலையில் இந்தியாவின் ஆஸ்ட்ராசெனெகா தடுப்பூசியின் இரு டோஸ்களையும் பெற்றுள்ளனர்.

பாராளுமன்றத்தில் உள்ள சுகாதார மையத்தில் 24 எம்.பிக்களுக்கு ரஸ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசியின் இரு டோஸ்களையும் பெற்றுள்ளனர்.

No comments