கருணா தலைமையில் கூட்டமைப்பு!


தமிழ் கூட்டமைப்பை உருவாக்கியதே எமது தலைவர் தான் என ஐக்கிய சுதந்திர முண்ணனியின் (கருணா குழு) வடமாகாண தலைமை

ஒருங்கிணைப்பாளர் சரவணமுத்து ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

எமது தலைவர் கருணாவாலேயே 12 ஆயிரம் போராளிகள் புனர்வாழ்வு அழிக்கப்பட்டு அன்று விடுதலைசெய்யப்பட்டனர். அது அனைவரும் அறிந்ததே. எனவே அரசியல் கைதிகள் முழுவதுமாக விடுவிக்கப்படுவர் அது கண்டிப்பாக இடம்பெறும்.

எமது தலைவர் கருணா தூய்மையானவர் என்பதை தற்போது அனைவரும் புரிந்துள்ளனர். அவர் யாரையும் காட்டிக்கொடுக்கவில்லை. எமது தலைவனுக்கு திணிக்கப்பட்டே அந்த பட்டம் வழங்கப்பட்டது. அது தற்போது கரைந்து கொண்டு வருகின்றது. தற்போது தவறு என்ன? அது எங்கே நடந்தது என்ற விடயம் மக்களிற்கு நன்றாக தெரியும்.

அது அரசியலாக்கப்பட்டு, அரசியல் கட்சிகளிடத்தில் வேறு விடயம் இல்லாதமையால் கருணா அம்மானை துரோகி ஆக்கி கடந்த பத்து வருடங்களாக அரசியல் செய்தார்கள். இப்போது எமக்கான நேரம் வந்துள்ளது அதனால் நாம் களம் இறங்கியுள்ளோம். நாம் அதில் வெற்றியடைந்து மக்களின் மனதை வென்றெடுப்போம்.

தமிழ் கூட்டமைப்பை உருவாக்கியதே எமது தலைவர் தான். அதில் மாற்றுக்கருத்தில்லை. அதனுடன் இணைந்து செயற்படுவது தொடர்பாக எமது தலைமையே தீர்மானிக்கும். எமது மக்களுக்கு தூய்மையான அரசியலை வழங்க வேண்டும் என்பதில் எமது தலைவர் உறுதியாக இருக்கின்றார். எனவே நாம் முன்னணி வகித்து ஒரு கூட்டமைப்பினை அமைப்பதற்கும் வாய்ப்புக்கள் இருக்கின்றது என்றார்.


No comments