தலைவரை படமெடுத்தது யாரடா? சீற்றத்தில் சுமா!

கூட்டமைப்பின் தலைவர்; இரா. சம்பந்தன் குறித்து சமூக வலைத்தளங்களில்  பகிரப்பட்டுவருகின்ற ஓர் வீடியோ பதிவு குறித்து சிறப்புரிமை கேள்வியொன்றை எழுப்பியிருக்கிறார் எம்.சு.சுமந்திரன்.தனது முழங்காலிலுள்ள பிரச்சினை காரணாமாக  சிகிச்சை பெற்றுவருகின்ற  இரா.சம்பந்தன் பாராளுமன்ற ஊழியர்களின் உதவியுடன் தனது  பாராளுமன்ற ஆசனத்தில் வந்தமர்வதை பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் வீடியோ பதிவு செய்து  சமூகவலைத்தளத்தினூடாக பகிர்ந்திருப்பதைக் குறித்து தனது கண்டனத்தை எம்.ஏ.சுமந்திரன் வெளியிட்டுள்ளார்.

இதை பற்றி மேலும் கூறுகையில், "நான் நியாயமாக சிந்திக்கும் அனைத்து  நாடாளுமன்ற உறுப்பினர்களின் சார்பாக இந்த சிறப்புரிமை  கேள்வியை எழுப்புகிறேன், இது ஒரு பாராளுமன்ற உறுப்பினரின் சிறப்பிரிமையை மீறுவதையும் தாண்டி ஓர் இழிவான  செயலாகும். எனவே, வீடியோ பதிவு செய்த பாராளுமன்ற உறுப்பினரை அடையாளம் கண்டு அவருக்கு  எதிராக உடனடியாக, கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு சபாநாயகரை வலியுறுத்துவதாக எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
No comments