வேழனுக்கும் விசாரணை!கிளிநொச்சி இரணைமடுச் சந்தி பகுதியில் வீதிக்கு குறுக்கே விபத்துக்களை ஏற்படுத்தும் வகையில் இராணுவத்தினரால் தூபியொன்று அமைக்கப்பட்டு வருகின்ற தூபியை அகற்ற கோரியே கரைச்சி பிரதேச சபை வலியுறுத்திவருகின்ற போதும் அதனை புறந்தள்ளி கட்டுமானங்கள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

இதனிடையே கரைச்சிப் பிரதேச சபையின் தவிசாளர் அருணாசலம் வேழமாலிகிதனை எதிர்வரும் 06 ஆம் திகதி கிளிநொச்சி, பயங்கரவாதக் குற்றத் தடுப்புப் பிரிவுக்கு சமூகமளிக்குமாறு இலங்கை காவல்துறையால் அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது.

அண்மைக்காலமாக கரைச்சி பிரதேச சபையின் உறுப்பினர்கள் பலரும் கொழும்பு நான்காம் மாடியிலும், கிளிநொச்சியிலும் அமைந்துள்ள பயங்கரவாதக் குற்றத் தடுப்புப் பிரிவின் அலுவலகங்களுக்கு விசாரணைகளுக்காக அழைக்கப்பட்டிரந்தனர்.

இந்நிலையில் தற்போது சபையின் தவிசாளருக்கும் விசாரணைக்கான அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது.


No comments