இந்திய தூதரகத்திற்கு புதிய அதிகாரி!



இலங்கைக்குள் சில நாடுகளின் செயல்பாடுகள், அவர்கள் உள்நாட்டில் ஏற்படுத்திக் கொள்ளும் தொடர்புகள் மற்றும் அவர்களின் இராணுவ இருப்பு ஆகியவற்றைக் கூர்ந்து கவனிப்பது தொடர்பில் சர்வதேச புலனாய்வு அமைப்புக்கள் அக்கறை கொண்டுள்ளன.

விடுதலைப்புலிகளது ஆயுதப்போராட்டத்தை மௌனிக்க வைக்க 2008ம் ஆண்டினில் காண்பிக்கப்பட்ட முனைப்பினை ஒத்ததாக புலனாய்வு நடவடிக்கைகள் சர்வதேச தரப்புக்களால் தற்போதும் கொழு;பில் முடுக்கிவிடப்பட்டுள்ளது.

இதனிடையே யாழிற்கான புதிய இந்திய துணைத்தூதராக ராகேஸ் நடராஜ் ஜெயபாஸ்கரன் இந்திய வெளியுறவு அமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ளார்.அவர் இன்று யாழ் இந்திய துணைத்தூதுவரகத்தில் உத்தியோகபூர்வமாக தனது கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார்  


யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத்தூதராக இருந்த பாலச்சந்திரன் ,அவசர அவசரமாக இடமாற்றப்பட்டுள்ளார்.அதேவேளை ,யாழ்ப்பாணத்திற்கான புதிய இந்திய துணைத்தூதராக ராகேஸ் நடராஜ் ஜெயபாஸ்கரன்   கடமைகளைப் பொறுப்பேறறுள்ளார்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த இவர், கண்டியிலுள்ள இந்திய துணைத் தூதரகத்தில் பணியாற்றிவரும் நிலையில் யாழில் இன்று தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.


No comments