மூடுவதா?விடுவதா?; மகிந்த - கோத்தா முறுகல்!
இலங்கையினை முழுமையாக முடக்குவது தொடர்பில் கோத்தபாய மற்றும் மகிந்த ஆதரவு தரப்புக்கள் முட்டிமோத தொடங்கியுள்ளன.
மூத்த பேராசிரியர் அர்ஜுன டி சில்வா, கொரோனா வைரஸ் தொற்றுநோய் தொடர்பாக இலங்கைக்கு அடுத்த இரண்டு வாரங்கள் முக்கியமானவை என்பதால் பொதுமக்களின் நடமாட்டத்தை குறைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அரசாங்கத்திடம் நேற்று(12) கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த நிலையில், இன்று காலை திட்டமிடப்பட்டுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் கொரோனா ஒழிப்பு செயலணிக்கு இடையிலான சந்திப்பைத் தொடர்ந்து கட்டுப்பாடுகள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
எனினும், இன்று காலை 10.30 மணிக்கு நடைபெறவிருந்த கூட்டம் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாட்டை முழுமையாக முடக்கும் போது, நாளாந்த ஊதியம் பெறுபவர்களையும் பெரும்பாலான அரசு ஊழியர்களையும் அது மோசமாக பாதிக்கும் என்பதால் முழுமையான முடக்கமொன்றை அமுல்படுத்துவதில் அரசாங்கத்தில் இதுவரை ஒருமித்த கருத்து இல்லை.ஏனைய சிலர், ஒரு குறுகியகால முடக்கம் கூட, மீட்க முயற்சிக்கும் பொருளாதாரத்தில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கவலை வெளியிட்டுள்ளனர்.
முடக்கத்தை மகிந்த ஆதரவு தரப்பு வலியுறுத்திவருகின்ற போதும் கோத்தா தரப்பு அதனை மறுதலித்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment