சிலர் முடங்கினர்: சிலர் புறந்தள்ளினர்?

வடமாகாண பிரதம செயலாளர் சமன் பந்துல சேனா அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள போதும் போதிய தடுப்பு நடவடிக்கைகள் கைதடியிலுள்ள வடமாகாண சபை தலைமையகத்தில் முன்னெடுக்கப்படவில்லையென்ற குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

ஒருபுறம் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர்  ஆ. கேதீஸ்வரன் தன்னை தானே சுயதனிமைப்படுத்திக்கொண்டார்.

வடமாகாண பிரதம செயலாளர் சமன் பந்துல சேனா அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் திணைக்கள தலைவர்கள் மட்ட கூட்டமொன்றை கூட்டியிருந்தார். இதனையடுத்து அவருடன் அவரின் அலுவலகத்தில் கலந்துரையாடல் மேற்கொண்ட வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ கேதீஸ்வரன், வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் பா.செந்தில்நந்தன் ஆகியோரும் சுய தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளனர்.

ஆயினும் ஒருபகுதியினர் தனிமைப்படுத்திக்கொள்ள இன்னொருசாரார் அதனை புறந்தள்ளி கடமைகளை தொடர்வது தொடர்பிலேயே குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.


No comments