தொற்று தீவிரமே:க.மகேசன்!யாழ் மாவட்டத்தில் கொரோனா தொற்று தீவிரமடைந்த நிலையில் காணப்படுவதாகவும் அதே வேளை இறப்புகளும் அதிகரித்து செல்வதாக யாழ் மாவட்ட செயலர் க.மகேசன் தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் மிகவும் அத்தியாவசிய நோக்கங்களுக்காக மாத்திரமே மாவட்ட செயலகத்திற்கு வருகை தர வேண்டும். எனினும் தற்போதுள்ள சூழ்நிலையில் மேலும் பல கிளைகளை மூடி சேவைகளை நிறுத்தியுள்ளோம். எதிர்வரும் திங்கட் கிழமையில் இருந்து குறிப்பிட்ட திணைக்களங்களுக்குரிய சேவைகள் மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் செயற்படுத்தப்படுமெனவும் க.மகேசன் தெரிவித்துள்ளார்.


No comments