சிறார்களை இலக்கு வைக்கும் கொரோனா!
வடமாகாணத்தில் நேற்றைய தினமான புதன்கிழமை இரண்டே வயதான சிறுவன் உட்பட 22 சிறுவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 2வயது சிறுவன், 6வயது இரட்டையர்களான பெண் குழந்தைகள் உட்பட 22 சிறுவர்களுக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவு தகவல்கள் கூறுகின்றன.
இதனிடையே இலங்கையில் இதுவரை 45ஆயிரத்து 831 சிறுவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
10 வயதுக்கும் கீழ்ப்பட்ட 19688 சிறுவர்களுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டிருப்பதோடு, 10 தொடக்கம் 18 வரையான சிறுவர்களில் 26143 பேர் கொரோனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.
18 வயதுக்கும் கீழ்ப்பட்ட 14 சிறுவர்கள் இதுவரை கொரோனா தொற்றினால் உயிரிழந்திருக்கின்றனர்.
Post a Comment