வடக்கில் 271: யாழில் மட்டும் 204!

யாழ் மாவட்டத்தில் 204 பேர் உட்பட வடமாகாணத்தில் நேற்று 271 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நேற்று யாழ் மாவட்டத்தில் பிசிஆர் பரிசோதனையில் 56 பேருக்கும்,  அன்ரியன் பரிசோதனை 148 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில் யாழ் பிசிஆர் பரிசோதனையில் சண்டிலிப்பாய் சுகாதார பிரிவில் 8 பேருக்கும்,  தெல்லிப்பளை வைத்தியசாலையில் 10 பேருக்கும்,  யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் 10 பேருக்கும்,  சாவகச்சேரி சுகாதார பிரிவில் 3 பேருக்கும்,  யாழ்ப்பாணம் சுகாதார பிரிவில் 3 பேருக்கும்,  பண்டத்தரிப்பு சுகாதார பிரிவில் 5 பேருக்கும்,  அளவெட்டி சுகாதார பிரிவில் ஒருவருக்கும்,  தெல்லிப்பளை வைத்தியசாலையில் 2 பேருக்கும்,  சங்கானை சுகாதார பிரிவில் 4 பேருக்கும் நொதேண் தனியார் வைத்தியசாலையில் ஒருவருக்கும்,  காரைநகர் சுகாதார பிரிவில் 9 பேருக்கும் என பிசிஆர் பரிசோதனையில் 56 பேருக்கும்,  கோப்பாய் சுகாதார பிரிவில் 9 பேருக்கும்,  யாழ்ப்பாணம் சுகாதார பிரிவில் 16 பேருக்கும்,  நல்லூர் சுகாதார பிரிவில் 29 பேருக்கும்,  வேலணை சுகாதார பிரிவில் 20 பேருக்கும், காரைநகர் சுகாதார பிரிவில் 9 பேருக்கும்,  உடுவில் சுகாதார பிரிவில் 4 பேருக்கும்,  பருத்தித்துறை சுகாதார பிரிவில் 56 பேருக்கும்,  மருதங்கேணி சுகாதார பிரிவில் 56 பேருக்கும்,  ஊர்காவற்துறை சுகாதார பிரிவில் 3 பேருக்கும் என யாழ் மாவட்டத்தில் 204 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

  யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் 3 பேருக்கும்,  வவுனியா இராணுவம் 3 பேருக்கும்,  வவுனியா சுகாதார பிரிவில் 13 பேருக்கும்,  மாந்தை கிழக்கு 2 பேருக்கும்,  முழங்காவில் கடற்படை இருவருக்கும்,  பலாலி இராணுவத்தினர் 9 பேருக்கும்,  வவுனியா சுகாதார பிரிவில் ஒருவருக்கும்,  செட்டிகுளம் சுகாதார பிரிவில் இருவருக்கும்,  பூவரசங்குளம் சுகாதார பிரிவில் இருவருக்கும்,  கிளிநொச்சி வைத்தியசாலையில் ஒருவருக்கும்,  மன்னார் சுகாதார பிரிவில் இருவருக்கும்,  முல்லைத்தீவு இராணுவத்தினர் 3 பேருக்கும்,  முல்லைத்தீவு வைத்தியசாலையில் 3 பேருக்கும்,  புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் 4 பேருக்கும் என வடமாகாணத்தில் நேற்று 271 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


No comments