நெடுங்கேணியில் ஆணின் சலடம் மீட்பு


வவுனியா வடக்கு - நெடுங்கேணி, பட்டுக்குடியிருப்பு கிராம அலுவலர் பிரிவில், இலங்கட்டிக்குளத்திற்கு அருகாமையில் ஆண் ஒருவரின் சடலம் காணப்பட்டுள்ளது.

அதேவேளை குறித்த சடலமானது பட்டிக்குடியிருப்பு கிராம அலுவலர் பிரிவினைச்சேர்ந்த செல்லத்துரை நவரட்ணம் வயது - 60 என்பவருடையது என இனங்காணப்பட்டுள்ளது.

குறித்த நபர் நேற்று (13.07.2021) மாலை, தனது மாடுகளைப் பார்ப்பதற்காகச்   சென்றநிலையில், இலங்கட்டி குளத்தின் அணைக்கட்டிற்கு அருகாமையில் இன்று (14.07.2021) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மேலும் குறித்த இறப்புச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நெடுங்கேணிப் காவல்துறையினர் மேற்கொண்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments