திருமலை உப்பாறுக் கரையோரத்தில் சடலம் மீட்பு


திருகோணமலை, கிண்ணியா பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பிரதேசமான உப்பாறு கரையோரத்தில் இன்று (17) காலை உடல் ஒன்று கரை ஒதுங்கிய நிலையில் காணப்பட்டதாக கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.

உப்பாறு கரையோரத்தில் அமைக்கப்பட்டிருந்த மீன் கூடுகளுக்கு இடையில் குறிப்பிட்ட சடலம் இன்று (17) காலை மீன் கூடுகளில் மீன்களை சேகரிக்கச்சென்ற மீனவர்களால் அவதானிக்கப்பட்டு கிண்ணியா பொலிஸுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாக கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.

சுமார் 35 தொடக்கம் 45 வயதானதாக அடையாளம் காணப்பட்ட நபரே இவ்வாறு சடலமாக கரை ஒதுங்கி உள்ளதாக கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.

No comments