மட்டக்களப்பு சிறுவர் இல்லத்தில் 23 சிறுவர்களுக்கு கொரோனா


மட்டக்களப்பு, களவஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட களுதாவலை பகுதியில் உள்ள சிறுவர் இல்லத்தில் 23 சிறுவர்களுக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

33 சிறுவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனை ஊடாக 23 சிறுவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனடிப்படையில் குறித்த சிறுவர் இல்லம் தற்காலிகமாக மூடப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சிறுவர் இல்லத்தின் ஊழியர் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments