ஆவாவுக்கு பின்னால் ஆமியா?சிவாஜி கேள்வி!யாழில் செயற்படுவதாக அரசு சொல்லிக்கொள்ளும் "ஆவா" வாள்வெட்டுக் குழுவை பாதுகாப்பு தரப்பினரால் அடக்க முடியாவிட்டால் தமிழர் பகுதிகளிலிருந்து பாதுகாப்புத் தரப்பினர் வெளியேறுங்கள். நாங்கள் அவர்களை பார்த்துக் கொள்வோம் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கம் சவால் விடுத்துள்ளார்.

இன்று செவ்வாய்க்கிழமை யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர் யாழ் மாவட்டத்தைப் பொருத்தவரை வாள்வெட்டு கலாச்சாரம் அதிகரித்த நிலையில் காணப்படுகின்றது.

அதிக அளவிலான பாதுகாப்பு தரப்பினர் இங்கு நிலைகொண்டுள்ள நிலையில் எவ்வாறு  வாள் வெட்டு கும்பல்கள் சுதந்திரமாகச் செயற்படுகின்றன என்பது சந்தேகமாகவுள்ளது.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தை நிறைவு செய்தோம் என மார்தட்டிக் கொள்ளும் இலங்கை பாதுகாப்பு தரப்பு சமூக விரோதச் செயல்களில் ஈடுபடும் ஆவா குழுவை கட்டுப்படுத்த முடியாமல் இருப்பது வேடிக்கையாக உள்ளதெனவும்; எம்.கே.சிவாஜிலிங்கம் சுட்டிக்காடடியிருந்தார்.


No comments