மாடு வந்தது:கிளிநொச்சியில் எம்பி முறைப்பாடு!கிளிநொச்சியில் பாராளுமன்ற உறுப்பினரின் அலுவலகத்துக்குள் மாடு சென்றதற்காக கணேசபுரத்தை சேர்ந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.அவர் கைது செய்யப்பட்டதையடுத்து ஓட்டி வந்த மாடுகள் வீதியில் அநாதரவாக நின்றிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேய்ச்சலின் பின்னராக ஓட்டி வந்தமாடுகள் கட்டுப்பாடின்றி நாடாளுமன்ற உறுப்பினரது அலுவலகத்திற்குள் புகுந்துகொண்டுள்ளன.

ஆவை அங்கிருந்த செடிகளை நாசமாக்கிய நிலையில் தெரிவிக்கப்பட்ட முறைப்பாட்டையடுத்து மாடுகளை ஓட்டி வந்த பொதுமகன் கைதானதாக தெரியவந்துள்ளது.


No comments