சாணக்கியனால் ஏலாது என்கிறார் மாவை!

சாணக்கியன் தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைமைத்துவத்தை கைப்பற்ற முயல்வதாக தான் குற்றஞ்சுமத்தவில்லையென இலங்கை தமிழரசுக் கட்சியின்

தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

ஊடகங்களிற்கு கருத்து தெரிவித்துள்ள அவர் தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தனை கட்சியின் தலைமைப்பதவியிலிருந்து நீக்குவதற்கான முயற்சிகள் எவையும் இடம்பெறவில்லையெனவும் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே நாடாளுமன்றில் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகள் பேசுவதற்கு நேரம் ஒதுக்குவது தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சைகளில் மாவை சேனாதிராசாவின் பெயர் அடிபட்டுவருகின்றது.

மாவை சேனாதிராசா பங்காளக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கு நேரம் ஒதக்குவது தொடர்பில் எதிர்கட்சி தலைவர் சஜித் பிறேமதாசவுடன் கட்சி தலைமையினை தாண்டி பேசியதாக குற்றச்சாட்டுக்கள் எழுப்பப்பட்டிருந்தது.

எனினும் அதனை மாவை சேனாதிராசா முற்றாக மறுதலித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments