கொரோனா தொற்றாளர்கள் தலைமறைவு:திண்டாடுகிறது பருத்தித்துறை!

பருத்தித்துறை நகர் வர்த்தக தொகுதியில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட ஆறு வர்த்தகர்கள்  தலைமறைவாகிய நிலையில் அவர்களுடன் பணியாற்றிய 70 பேரைக் காணவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் சுகாதாரத்துறையினர் தனிமைப்படுத்தலிற்காக அவர்களை தேடி வருகின்றனர்.

அவர்கள் சமூகத்தில் நடமாடுவதால் தொற்றாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் என சுகாதாரத் துறையினர் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

ஏற்கனவே கொரோனா தொற்றினையடுத்து பருத்தித்துறை நகரம் முடக்கப்பட்டுள்ளது.

சந்தையில் மாம்பழ வியாபாரிகள்,வங்கி உத்தியோகத்தர்களென பலரும் தொற்றிற்குள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.No comments