பிரசாந்தனுக்கு பிணை!!


தமிழ்மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூபாலப்பிள்ளை பிரசாந்தனுக்கு  கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (06) பிணை வழங்கியுள்ளது.  

கொவிட் 19 அச்சுறுத்தல் நிலையினைக் கருத்திற் கொண்டு இன்றைய தினம்சூம் (Zoom) தொழில்நுட்பத்தின் ஊடாக குறித்த வழக்கு விசாரனைகள் எடுத்துக்கொள்ளப்பட்டபோது, பிரசாந்தன் சார்பில் மேற்கொள்ளப்பட்டிருந்த மேன்முறையீட்டின் அடிப்படையில் நீதிமன்றத்தினால் பிணை வழங்கப்பட்டுள்ளது.

2008ஆம் ஆண்டு ஆரையம்பதியில் இடம்பெற்ற இரட்டைக் கொலை வழக்கின் சாட்சியாளரை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் 2020.06.08 அன்று, காத்தான்குடி பொலிஸாரால் பிரசாந்தன் கைது செய்யப்பட்டு, சட்டாமாதிபர் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டிருந்தார்.

No comments