பற்றியெரிகிறது மருதானை காவல் நிலையம்

கொழும்பு  மருதானை பொலிஸ் நிலையத்தில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தீயணைக்கும் பணிகளில் 3 தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக கொழும்பு தீயணைப்பு சேவை திணைக்களம் கூறியுள்ளது.

தீப்பரவலுக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.

தீப்பரவல் தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக மருதானை பொலிஸார் தெரிவித்தனர்.


No comments