கேப்பாபுலவில் வீட்டு சாப்பாட்டிற்கு அனுமதியில்லை!



முல்லைத்தீவு - கேப்பாப்புலவு, விமானப்படைத்தளத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள இலங்கை ஆசிரியர் சங்கச் செயலாளர் ஜோசெப் ஸ்டாலின் உள்ளிட்டவர்களுக்காக, குடும்பத்தவர்களால், அவர்களின் வீட்டில் செய்யப்பட்ட சமைத்த உணவுகளை பொதுச்சுகாதாரப் பரிசோதகர்கள் ஏற்க மறுத்ததுள்ளனர்.

எனினும் இலங்கை ஆசிரியர்சங்கத் தலைவர் பிரியர்ந்த பர்னாந்து தலைமையிலான குழுவினர் ஒருதொகுதி உலர் உணவுப்பொருட்களை விமானப்படையினரிடம் கையளித்துள்ளனர்.

குறிப்பாக இலங்கை ஆசிரியர்சங்கத் தலைவர் பிரியந்த பர்னாந்து தலைமையில், இலங்கை ஆசிரியர்சங்க வடமத்தியமாகாண இணைப்பாளர் ஜே.எம்.இலியாஸ் , இலங்கை ஆசிரயர்சங்க வவுனியா மாவட்ட தலைவர் பாஸ்கரமூர்த்தி நேசராஜா உள்ளிட்ட குழுவினர் இவ்வாறு முல்லைத்தீவு - கேப்பாப்புலவு விமானைப்படைத்தளத்தில் உள்ள தனிமைப்படுத்தல் மையத்துக்கு நேற்று இன்று வருகைதந்து, ஆசிரியர்சங்கத்தின் செயலாளர் ஜோசெப் ஸ்டாலின் உள்ளிட்ட குழுவினருக்கான உலர் உணவுப்பொருட்களை விமானப்படையினரிடம் கையளித்திருந்தனர்.

அதேவேளை இவ்வாறு வருகைதந்தவர்களை விமானப்படையினர் விமானப்படைத்தளத்திற்குள் தனிமைப்படுத்தலிலுள்ளவர்களைப் பார்வையிட அனுமதித்திருக்கவில்லை.

அத்தோடு வருகைதந்த ஆசிரியர்சங்கத்தலைவர் தலைமையிலான குழுவினருடன் விமானப்படைத்தளத்திற்கு வெளிப்பகுதியிலே விமானப்படயினர் மற்றும், பொதுச்சுகாதார பரிசோதகர்கள் கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தனர்.

அதனைத்தொடர்ந்து தனிமைப்படுத்தலில் உள்ள இலங்கை ஆசிரியர்சங்கச் செயலாளர் ஜோசெப் ஸ்டாலின் உள்ளிட்டவர்களுக்குரிய உலர் உணவுப்பொருட்களை விமானப்படையினர் பரிசோதித்து பெற்றுக்கொண்டனர்.


அத்துடன் உணவுப்பொருட்களை வழங்கிய ஆசிரியர்சங்கத் தலைவர் தலைமையிலான குழுவினரின் விபரங்களும் விமானப்படையினரால் பெற்றுக்கொள்ளப்பட்டது.


மேலும் தனிமைப்படுத்தலில் உள்ளவர்களின் குடும்பத்தவர்களால், அவர்களின் வீட்டில் செய்யப்பட்ட சமைத்த உணவுகளை பொதுச்சுகாதாரப் பரிசோதகர்கள் ஏற்க மறுத்ததுடன், சுகாதார வழிமுறைகளுக்கு உட்பட்ட உணவுகளை மாத்திரமே வழங்க அனுமதிக்கமுடியும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


No comments