முடக்கத்தினுள் வங்கிகள் இயங்குமாம்


கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பருத்தித்துறை நகர் உள்ளிட்ட மேலும் சில பகுதிகள் மறு அறிவித்தல் வரை முடக்கப்பட்டுள்ளதாக பருத்தித்துறை சுகாதார பிரிவினர் அறிவித்துள்ளனர்.

பருத்தித்துறை  3ஆம் குறுக்குத்தெரு, தும்பளை வீதி, வீ.எம் வீதி  தொடக்கம் கடற்கரை வரையான பகுதிகளும் பஸ் நுழைவாயில், பத்ரகாளி அம்மன் ஒழுங்கை உள்ளிட்ட பகுதிகள் முடக்கப்பட்டுள்ளன.

வங்கிகள் உட்பட அத்தியாவசிய சேவைகள் மாத்திரம் இயங்கும்.

நேற்று (14)  206 பேரின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு யாழ்.பல்கலைக்கழக ஆய்வுகூடத்தில் இன்று மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் 40 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். அத்துடன் அன்ரிஜன் பரிசோதனையில் மேலும் 5 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது. 

 இதனையடுத்தே  இவ்வாறு முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments