அதிபரைக் கொன்றது கூலிப்படையினர்!! அமெரிக்கர்கள் உட்பட 17 பேர் கைது!!


ஹைட்டி அதிபரைச் சுட்டுக்கொன்ற கூலிப்படைச் சேர்ந்த 26 பேரை அந்நாட்டுக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கைதானவர்களில் அதிகளவானோர் ஓய்வுபெற்ற கொலம்பிய வீரர்களைக் கொண்ட ஒரு குழு எனத் காவல்துறையினர் தொிவித்துள்ளனர்.

இந்த குழுவில் 26 கொலம்பியர்களும் ஹைட்டிய வம்சாவளியைச் சேர்ந்த இரண்டு அமெரிக்கர்களும் அடங்குவதாக காவல்துறைத் தலைவர் லியோன் சார்லஸ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

சந்தேகநபர்களில் 8 பேரைக் காவல்துறையினர் வலைவிரித்துத் தேடிவருகின்றனர். அதே நேரத்தில் இரண்டு அமெரிக்கர்கள் உட்பட 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மீதமுள்ள சந்தேக நபர்கள் தலைநகர் போர்ட் ஓ பிரின்ஸ் நகரில் காவல்துறையினருடான துப்பாக்கிச் சண்டையின் போது சுட்டுக் கொல்லப்பட்டனர்.

புதன்கிழமை அதிகாலையில், துப்பாக்கி ஏந்திய குழுவினர் ஜனாதிபதியின் வீட்டிற்குள் நுழைந்து அவனையும் அவரது மனைவியையும் சுட்டுக் கொன்றனர். ஹைட்டி அதிபர் மோஸின் உடலில் 12 புல்லட் காயங்களுடன் சம்பவ இடத்தில் இறந்துகிடந்தார்.

அவரது மனைவி மார்ட்டின் பலத்த காயமடைந்து சிகிச்சைக்காக புளோரிடாவுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார், அங்கு அவருக்கு சிகிற்சை அளிக்கப்பட்டு வருகின்றது

தாக்குதலைத் திட்டமிட்டவர் யார்? அல்லது அதைத் தூண்டியது எது என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. எவ்வாறாயினும், ஹைட்டியின் இடைக்கால பிரதமர் கிளாட் ஜோசப் அதிபர் நாட்டில் குழுக்களுடன் போராடியதால் அவர் குறிவைக்கப்பட்டிருக்கலாம் என்று கூறினார்.

நேற்று வியாழக்கிழமை கைது செய்யப்பட்டவர்களிடம் சந்தேக ஆயுதங்கள், கொலம்பிய கடவுச்சீட்டு, திறன்பேசிகள் மற்றும் ஆதாரங்களை ஊடகங்களுக்கு வழங்கினர். அதிபரைக் கொல்ல வெளிநாட்டினர் நம் நாட்டுக்கு வந்தார்கள் என்று திரு சார்லஸ் கூறினார்.

தப்பியுள்ள எட்டு கூலிப்படையினரைத் தடுக்க எங்கள் விசாரணைகள் மற்றும் தேடல் நுட்பங்களை நாங்கள் பலப்படுத்துவோம் என்று அவர் மேலும் கூறினார்.

No comments