இங்கிலாந்தை வீழ்த்தி ஐரோப்பிய கிண்ணத்தை வெற்றது இத்தாலி!!


ஐரோப்பிய உதைபந்தாட்ட சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில், இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் இத்தாலி அணி 3:2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று வெற்றிக்கிண்ணத்தைக் கைப்பற்றியது.

ஆட்டத்தில் முதல் பாதியில் இங்கிலாந்து அணி ஒரு கோலுடன் முன்னிலை வகித்தது. அதில் இங்கிலாந்து அணி வீரர் லூக் ஷாவின் கோல் 1 நிமிடம் 57 வது வினாடியில் முதலாவது கோல் அடிக்கப்பட்டது. இது யூரோ சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டியில் அடித்த வேகமான கோல் ஆகும்.

இதனைத்தொடர்ந்து நடந்த இரண்டாவது பாதி ஆட்டத்தின் 67வது நிமிடத்தில் இத்தாலி அணி வீரர் லியோனர்டோ போனுக்சி கோலை  அடித்தார். இதனால் ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலைக்கு வந்தது. தொடர்ந்து நடந்த ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் அடிக்க எடுத்துக்கொண்ட முயற்சிகள் பலனளிக்காமல் போனது.

இதனைத்தொடர்ந்து மேலதிகமான வழங்கப்பட்ட 30 நிமிடங்களில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. பின்னர் பெனாலிட்டி ஷூட் அவுட் முறையில் வெற்றியை தீர்மானிக்க முடிவு செய்யப்பட்டது. அதில் இத்தாலி அணி 3 கோல்களும், இங்கிலாந்து அணி 2 கோல்களும் அடித்தன. இதன்அடிப்படையில் இத்தாலி அணி வெற்றி பெற்று இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

முன்னதாக 4 முறை உலக சாம்பியனான இத்தாலி அணி இதற்கு முன்பு ஒரே ஒரு முறை யூரோ கோப்பையை (1968-ம் ஆண்டு) வென்றுள்ளது.

No comments