யாழில் மரணித்த குழந்தைக்கு கொரோனா?

சண்டிலிப்பாய் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 9 மாத பெண்குழந்தையொன்று  உயிரிழந்த நிலையில் பிரேத பரிசோதனையில் குழந்தைக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. 

குழந்தை சுகயீனமுற்ற வேளை  சங்கானை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு நேற்று (15) அங்கு மரணமடைந்துள்ளது. 

யாழ்ப்பாணத்தில் உயிரிழந்த குழந்தைக்கு கொரோனா   தொற்று இனங்காணப்பட்ட முதலாவது சம்பவம் இதுவாகும்.

இதனிடையே வட்டுக்கோட்டை கொரோனா தனிமைப்படுத்தல் மையத்தில் சிகிச்சை பெற்றுவரும் கொரோனாத் தொற்றாளருக்கு மதுபானம் வழங்குவதற்காக மதில் ஏறிக்குதித்த இருவர் நேற்று இரவு பொலிஸாரிடம் சிக்கியுள்ளனர்.

இவர்கள் பருத்தித்துறையைச் சேர்ந்த தொற்றாளர் ஒருவருக்கே அவர்கள் மதுபானம் கொண்டுவந்துள்ளதுடன் தாம் மல்லாகத்தைச் சேர்ந்தவர்கள் என்று  இருவரும் பொலிஸ் விசாரணையில் தெரிவித்துள்ளனர்.


No comments