கறுப்பு ஜீலையும் கடுகடுக்க வைக்கிறது!கறுப்பு யூலையை நினைவு கூருதல் கூட இலங்கை அரசிற்கு அலர்ஜியாகியுள்ளது.

ஆவ்வகையில் யாழ்ப்பாணத்தில் தமிழ் தேசிய பண்பாட்டுப் பேரவையால் ஒட்டப்பட்ட  கறுப்பு ஜீலை சுவரொட்டிகள் அனைத்தும் இரவோடு இரவாக இலங்கை பொலீஸாராவும், இராணுவ புலனாய்வாளர்களாலும் முற்று முழுதாக கிழித்தெறியப்பட்டுள்ளது.

ஏற்கனவே கறுப்பு ஜூலை படுகொலையை நினைவுகூர தடை உத்தரவு வழங்கி மூதூர் நீதிவான் நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது.

இலங்கை காவல்துறையால் நீதிமன்றத்தில் முன்வைத்த விண்ணப்பத்தை ஆராய்ந்து தடை உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

இன்று 23ஆம் திகதி கறுப்பு ஜூலை படுகொலை நினைவேந்தலை நடத்த தயாராகி வருவதாக காவல்துறை மன்றுக்கு தெரிவித்ததையடுத்து வெருகல் பிரதேச சபையின் துணைத் தலைவர் தேவநாயகம் சங்கர், அகில இலங்கை தமிழ் காங்கிரசின் திருகோணமலை மாவட்ட செயலாளர் கணேசப்பிள்ளை குகன் உள்ளிட்டோருக்கு தடை உத்தரவு கட்டளை வழங்கப்பட்டமை தெரிந்ததே.


No comments