கைதான இளைஞனின் வீட்டிற்கு சிறீதரன் பயணம்!தமிழீழ விடுதலைப் புலிகளின் சின்னங்களுடன் கைதான இளைஞரது வீட்டிறகு கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் பயணமொன்றை மேற்கொண்டுள்ளார்.

புலிகளது சின்னங்களுடன், நாம் தமிழர் கட்சியின் கொடி, ஆவா குழுவின் சின்னம் மற்றும் வாள் என்பவற்றை தனது கையடக்க தொலைபேசியில் படங்களாக வைத்திருந்தமை தொடர்பான குற்றச்சாட்டுகளின் கீழ் கிளிநொச்சி உதயநகர் பகுதியில் அண்மையில் ஒரு இளைஞன் விசேட அதிரடிப்படையினரால் அண்மையில் கைது செய்யப்பட்டிருந்தார்.

அந்த இளைஞனின் இல்லத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் நேற்று முந்தினம் சென்று தாய், சகோதரி மற்றும் உறவினர்களுடன் விடயங்களை கேட்டறிந்து கொண்டதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

முன்னாள் அரசியல் கைதிகள் உள்ளிட்ட பாதிக்கப்பட்ட தரப்பினை எட்டிப்பார்த்திருப்பதில்லையென்ற குற்றச்சாட்டுக்கள் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது முன்வைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. 


No comments