வடக்கில் சிங்கள கோடீஸ்வரர்களிற்கு கடலட்டை பண்ணை!டக்ளஸ் தேவானந்தாவின் நெறிப்படுத்தலில் 300க்கு மேற்பட்ட அட்டைப்பண்ணைகள் உருவாவதாக தேசிய நீர் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகாரசபை உதவிப் பணிப்பாளர் தெரிவித்துள்ள நிலையில் அவற்றில் முக்கியமான ஆறு பண்ணைகள் சிங்கள கோடீஸ்வர வர்த்தகர்களிற்கென்பது தெரியவந்துள்ளது. .

கிளிநொச்சி மாவட்டத்தில் மாத்திரம் தற்போது 250க்கும் அதிகமான கடலட்டைப் பண்ணைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்ட அவர், 2019ம் ஆண்டுக்கு முன்னர் சுமார் 50 கடலட்டைப் பண்ணைகளுக்கே அனுமதி வழங்கப்பட்டிருந்ததாகவும், டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கடற்றொழில் அமைச்சராகப் பொறுப்பேற்ற பின்னர் அது இப்போது 300ஐக் கடந்து உயர்ந்திருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

எனினும் இதனை முற்றாக வடமாகாண மீனவ சமாசங்களின் சம்மேளனம்; மறுதலித்துள்ளது.

தற்போது நூறு விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டுள்ளன.மீதி 200 விண்ணப்பங்கள் காத்திருக்கின்றன.

முதலில் அனுமதிக்கப்பட்ட விண்ணப்பங்களில் ஆறு விண்ணப்பங்கள் தென்னிலங்கையை சேர்ந்த சிங்கள கோடீஸ்வர வர்த்தகர்களிற்கென்பது தெரியவந்துள்ளது. 


No comments