நாடு எரிகையில் பூங்கா கட்டிய கதை!
 மக்கள் அடுத்த வேளை சாப்பாட்டிற்கு அலைந்து திரிகையில் கொழும்பில் அமைக்கப்பட்ட இலங்கையின்  முதலாவது தேசிய சந்தனமர பூங்காவின் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் திறந்துவைக்கப்படவுள்ளது.

இலங்கை ஜனாதிபதி கோட்டபாஜ ராஜபக்ஷவின் அறிவுறுத்தலின் படி  கொழும்பு பத்திரமுள்ள பகுதியில்  2020 ஜூலை 20 ஆம் திகதி   தொடங்கப்பட்டன.

 9 ஏக்கர் நிலத்தில் 1000 சந்தனமரங்களைக் கொண்டு குறித்த பூங்கா உருவாக்கப்பட்டுள்ளது. இப் பூங்காவிற்கு நடுவில் 200,000 லீற்றர் நீர் கொள்ளக்கூடிய 11 நீர் தடாகங்களும் உருவாக்கப்பட்டுள்ளது. 

அத்துடன்  900 மல்லிகை தாவரங்கள் உள்ளன.  

இந்த சந்தரமரப்பூங்காவில் அழகான முறையில் வர்ண மின்விளக்குகளும் பொருத்தப்பட்டுள்ளன. 

நுழைவாயில் பார்வையாளர்கள் இருபுறமும் வண்ணமயமான பூங்கொத்துகளுடன்  சுற்றுச்சூழலில்   மின்விளக்குகள் உள்ளன. 

No comments