சிறுமி கொலைக்கு நீதி கோரி யாழில் போராட்டம்!முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணிபுரிந்த டயகமவைச் சேர்ந்த 16 வயது சிறுமியின் இறப்புக்கு நீதி வேண்டும் எனக் கோரி, யாழ்ப்பாணம் பஸ் நிலையத்துக்கு முன்னால், மலையகத்தைச் சேர்ந்த ஒருவர், இன்று (20), கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

தனது தங்கையின் இறப்புக்கு நீதி வேண்டும்,  குறித்த சிறுமி உயிரிழப்பு தொடர்பில் நேரடியாக ஜனாதிபதி தலையிட்டு, சிறுமியின் இறப்புக்கு நீதி பெற்றுத்தர வேண்டும், சிறுமியின் மரண விசாரணை அறிக்கை நேரடியாக ஜனாதிபதியிடம் கையளிக்கப்படும் எனக் கோரி, இவர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்.

No comments