பாலசுந்தரம்பிள்ளைக்கு அடைக்கலம் கொடுத்த சுமா!


தனது முன்னாள் சகபாடிகளை டக்ளஸ் தேவானந்தா கைவிட்ட நிலையில் அவர்களிற்கு கூட்டமைப்பு ஆதரவு கொடுத்துள்ளது.

யாழ்.பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் பாலசுந்தரம் பிள்ளை, சட்டத்தரணி கௌதம் பாலசந்திரன் ஆகியோர் தேர்தல் சீர்திருத்த தெரிவுக்குழுவின் விற்பன்னர் உபகுழுவின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். 

கௌதம் பாலசந்திரனை, தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்பியும்,  பாலசுந்தரம் பிள்ளையை தமிழ் தேசிய கூட்டமைப்பு பேச்சாளர் சுமந்திரன் எம்பியும் சிபாரிசு செய்துள்ளனர்.

டக்ளிஸின் சகபாடியாக மேடையேறிய பேராசிரியர் பாலசுந்தரம் பிள்ளை போன்றோரை  கைவிட்டுள்ள நிலையில் தற்போது வெளிநாட்டிற்கு ஆட்களை அனுப்பும் ஏஜென்சி வேலை பார்த்தவர்களை  இணைத்துக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments