வாசலிற்கு வந்தது யாழ்.பல்கலை ஆசிரிய சங்கமும்!

 


நீண்ட மௌனம் கலைத்து யாழ்.பல்கலைக்கழக ஆசிரிய சங்கமும் போராட்ட களத்திற்கு வந்துள்ளது.

பல்கலைக்கழக நுழைவாயிலில் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் ஆர்ப்பாட்டம் ஒன்றினை இன்று மதியம் முன்னெடுத்திருந்தது. 

கொத்தலாவல பாதுகாப்பு சட்ட மூலத்தை எதிர்த்தே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

தென்னிலங்கையில் எதிர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்ற நிலையில் யாழ்.பல்கலைக்கழகமும் போராட்ட களத்தில் இணைந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


No comments