ரஷ்யாவின் 2வது ஹைபர்சோனிக் ஏவுகணை சோதனை!! உலகில் சமநிலையற்ற நிலையைத் தோற்றுவித்துள்ளது புதின் பெருமிதம்!!


சிர்கான் ஹைபர்சோனிக் குரூஸ் ஏவுகணையின் மற்றுமொரு சோதனையை ரஷ்யா வெற்றிகரமாக நடத்தி முடித்துவிட்டது என ரஷயா அறிவித்துள்ளது.

இந்த புதிய தலைமுறை ஏவுகணை அமைப்புகளின் ஒரு பகுதியான இந்த ஏவுகணை உலகில் சமநிலையற்ற நிலையைத் தோற்றுவித்துள்ளது என  ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் கூறியுள்ளார்.

ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் இன்று திங்களன்று ரஷ்யாவின் வடக்கில் வெள்ளைக் கடலில் அமைந்துள்ள அட்மிரல் கோர்ஷ்கோவ் என்ற போர்க்கப்பலில் இருந்து ஏவுகணை ஏவப்பட்டதாகக் கூறியது.

350 கி.மீ (217 மைல்) தொலைவில் உள்ள பேரண்ட்ஸ் கடலின் கடற்கரையில் ஒரு தரை இலக்கை வெற்றிகரமாக தாக்கும் முன் குறித்த ஏவுகணை ஒலியின் வேகத்தை விட ஏழு மடங்கு வேகத்தில் பயணித்தது என்றும் சிர்கான் ஏவுகணையின் தந்திரோபாய மற்றும் தொழில்நுட்ப பண்புகள் சோதனைகளின் போது உறுதி செய்யப்பட்டன என்று ரஷ்யாவின் பாதுகாப்பு தெரிவித்துள்ளது.

சிர்கான் ஏவுகணை அமைப்பை நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் போர்க் கப்பல்களில் பொருத்த ரஷ்யா திட்டமிட்டுள்ளது.

சிர்கான் ஏவுகணை ஒலியின் வேகத்தை விட ஒன்பது மடங்கு வேகத்தில் பறக்கும் என்றும் 1,000 கி.மீ (620 மைல்) வரம்பைக் கொண்டிருக்கும் என்றும் புடின் முன்பு கூறியிருந்தார்.

ஆனால் சில மேற்கத்திய வல்லுநர்கள் ரஷ்யாவின் புதிய தலைமுறை ஆயுதங்கள் எவ்வளவு முன்னேறியுள்ளன என்று கேள்வி எழுப்பியுள்ளனர். அதே நேரத்தில் வேகம், தந்திரோபாயம், கண்ணுக்குப் புலப்படாமை போன்ற ஹைபர்சோனிக் ஏவுகணைகளைக் கண்காணிப்பதும் இடைமறிப்பதும் கடினம் என்பதை அங்கீகரிக்கிறது.

சிர்கான் ஏவுகணையின் முதலாவது சோதனை  அக்டோபரில் புடினின் பிறந்த நாளில் நடந்தது.

ரஷ்யாவின் அதிபர் புதின் இது நாட்டுக்கு ஒரு பெரிய நிகழ்வு என்று பாராட்டினார்.

புடின் 2018 ஆம் ஆண்டில் புதிய ஹைபர்சோனிக் ஆயுதங்களின் தர வரிசையை தனது உரை ஒன்றில் அறிவித்தார். அவை உலகின் எந்தவொரு புள்ளியையும் தாக்கி அமெரிக்காவில் கட்டப்பட்ட ஏவுகணை கவசத்தை ஊடறுத்துச் இலக்கைத் தாக்கும் என்று கூறியிருந்தார்.

அடுத்த ஆண்டு, ஐரோப்பாவில் இடைநிலை தூர அணு ஆயுதங்களை அனுப்ப வாஷிங்டன் நகர்ந்தால், அமெரிக்க பிராந்திய கடலுக்கு வெளியே பதுங்கக்கூடிய கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்களில் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை நிறுத்தப்படும் என அவர் அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்த எச்சரிக்கையை அடுத்து வாஷிங்டன் ஐரோப்பாவில் இதுபோன்ற ஏவுகணைகளை அனுப்பவில்லை என ஆனால் மொஸ்கோ கவலை கொண்டுள்ளது என தெரிவித்திருந்தது.

இரு தலைநகரங்களுக் கிடையேயான பதட்டங்கள் பெலாரஸ், ​​உக்ரைன், நேட்டோ மற்றும் மனித உரிமைகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளில் மூழ்கி வருகின்றன.

ரஷ்யாவிற்கும் மேற்கு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் தற்போது பனிப்போருக்குப் பின்னர் குறைந்த நிலையில் உள்ளன என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

No comments