கோத்தா கொலைகளை கண்டறிந்தவருக்கு ஓய்வு!

 


கோத்தாவின் கொழும்பு கொலைகளை கண்டறிந்த குற்றவியல் புலனாய்வுத் துறையின் முன்னாள் இயக்குநர் சனி அபாசேகர நேற்று (ஜூன் 30) ஓய்வு பெற்றார்.

முப்பத்தைந்து ஆண்டுகள் சிறந்த பொது சேவையின் பின்னர அவர் ஓய்வு பெற்றுள்ளார்.

ஆட்கடத்தல்கள்,மர்மமான மனிதக் கொலைகள் உட்பட நூற்றுக்கணக்கான குற்றங்களின் முடிவைக் கூட பார்க்காமல் சட்டத்தின் முன் அனைத்து குற்றவாளிகளையும் சிக்க வைத்த உயர் அதிகாரி சானி அபயசேகர என ஊடகச்செயற்பாட்டாளர் போத்தல ஜெயந்த தெரிவித்துள்ளார்.

2020 ஆம் ஆண்டில் ராஜபக்ச தரப்பு மீண்டும் ஆட்சிக்கு வந்த பின்னர், சிறையில்; கடந்த பத்து மாதங்களாக அடைக்கப்பட்ட சானி பல சித்திரவதைகளுக்கு உள்ளாகியுள்ளார். மேல்முறையீட்டு நீதிமன்றமும் அவருக்கு ஜாமீன் வழங்கியதுடன்; அவரை தடுத்து வைத்தமையை விமர்சித்துள்ளது.

இப்போது அவர் தன்னையும் குடும்பத்தையும் அச்சுறுத்தும் ஆட்சியாளர்களிடமிருந்து பாதுகாப்பு கேட்க வேண்டும். ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையர் அவரது உயிர் பாதுகாப்பை உறுதி செய்ய இலங்கை அரசாங்கத்திற்கும் தகவல் அளித்துள்ளார். நாட்டின் பொது மக்களின் நலனுக்காக துணிச்சலாக குற்றங்களுக்கு எதிராக தனது முழு வாழ்க்கையையும் தியாகம் செய்த சானி அபயசேகராவின் உயிரைப் பாதுகாக்க அரசாங்கத்தை கட்டாயப்படுத்துவது நாட்டின் அனைத்து குடிமக்களின் கடமையாகுமெனவும் போத்தல ஜெயந்த தெரிவித்துள்ளார்.

முன்னதாக கோத்தா பணிப்பில் கடத்தப்பட்ட போத்தல கடுமையாக தாக்கப்பட்டபின்னராக விடுவிக்கப்பட்டவர்களுள் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.


No comments