உரப்பிரச்சினை:8ஆயிரம் கோடி விவசாயிகளிற்காம்!இலங்கையில் அசேதன உரங்களை இறக்குமதி செய்யும் விவகாரம் கோத்தபாய அரசிற்கு தலையிடியாகியுள்ளது.நாள் தோறும் விவசாயிகள் கோத்தா அரசிற்கெதிராக வீதியில் இறங்கி போராட தொடங்கியுள்ளனர்.

இதனிடையே சேதனப் பசளைப் பயன்பாட்டு தீர்மானத்தில் இருந்து பின்வாங்க வேண்டாமென விவசாயச் சங்கங்களின் பிரதிநிதிகள் ஒரே குரலில் தெரிவித்துள்ளதாக புதிய கதைகளை கோத்தா அரசு காண்பிக்க தொடங்கியுள்ளது.

அத்துடன் பசளை இறக்குமதிக்காக செலவிடப்படும் 80,000 மில்லியன் ரூபாயை விவசாயிகளுக்குக் கிடைக்க வழிசெய்வேன் என ஜனாதிபதி கோத்தபாய தெரிவித்துமுள்ளாராம்.

நேற்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற இலங்கைத் தேசிய விவசாயிகள் சம்மேளனத்தின் மாவட்ட விவசாயப் பிரதிநிதிகளுடனான சந்திப்பின் போதே, அவர்கள் இது பற்றித் தெரிவித்ததாக ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது. சேதனப் பசளையை அறிமுகப்படுத்தியதன் பின்னர் அரசாங்கம் நடைமுறைப்படுத்த எதிர்பார்த்துள்ள நிகழ்ச்சித்திட்டம் பற்றி, விசாயச் சங்கங்களின் பிரதிநிதிகளுக்கு ஜனாதிபதி விளக்கியதாக தெரியவந்துள்ளது.

விவசாயிகளது வீதிக்கிறங்கிய போராட்டம் தெற்கில் பெரும் பின்னடைவை அரசிற்கு தோற்றுவித்துள்ளது.


No comments