அல்லைப்பிட்டியில் பாகிஸ்தான் புலனாய்வு!யாழ்ப்பாணத்தின் அல்லைப்பிட்டியில் மீண்டும் பாகிஸ்தானிய புலனாய்வு அமைப்பு களமிறங்குவதாக சி.சிறீதரன் எச்சரித்துள்ளார்.

யாழ்ப்பாண தீவு பகுதிகளை நோக்கி சீனா, பாகிஸ்தான் நிறுவனங்கள் அகலக்கால் வைக்கின்றன. அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை தமிழ் மக்களை பெரும் இன்னலுக்கு உள்ளாக்கும் எனவும் சி.சிறீதரன் இலங்கை நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார். 

அண்மையில் யாழ்ப்பாணம் வந்த பாகிஸ்தான் தூதுவர் மண்டைதீவில்தான் தங்கியிருந்துள்ளார். மண்டைதீவு, அல்லைப்பிட்டி பகுதிகளை பார்வையிட்டுள்ளார். இது எமக்கு பலத்தை சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவிற்கு அண்மையிலுள்ள அல்லைப்பிட்டியில் பாகிஸ்தான் நிறுவனமொன்று விடுதியொன்றை கட்ட முயன்ற போது, கடந்த காலங்களில் தடுத்து நிறுத்தப்பட்டிருந்தது. 

முன்னதாக இதே குற்றச்சாட்டை ஊடகமொன்றில் சி.சிறீதரன் முன்வைத்திருந்த நிலையில் அதனை அரசு மறுதலித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 


No comments