யாழிலும் போராட்டம்:குடும்பமே நீதிமன்றில்!பாராளுமன்ற உறுப்பினர் ரிசார்ட் பதியூனின் வீட்டில் உயிரிழந்த டயகமவை சேர்ந்த 16 வயது சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி இலங்கை முழுவதும் இன மத வேறுபாடு தாண்டி போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

அவ்வகையில் மகளீர் அபிவிருத்தி நிலையத்தின் ஏற்பாட்டில் மகளீர் அமைப்புக்களின் பங்குபற்றுதலில் யாழ் நகரில் போராட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நீதி கோரிய போராட்டத்தில் பெண்கள் அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் அரசியல் பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தனர்.

இதனிடையே நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியுதீனின் மனைவி, அவரது மாமனார், மைத்துனர் மற்றும் தரகர் ஆகியோர் கொழும்பு புதுக்கடை இலக்கம் 2 நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படடுள்ளனர்.


No comments