தெற்கு கொதிக்கிறது!தெற்கில் நாளுக்கு நாள் ஏற்பட்டுவரும் அரசியல்மாற்றம் அனைத்து மட்டங்களிலும் அரசிற்கெதிராக  திருப்பிவருகின்றது.அதிலும் பஸிலின் வருகை ,தனிமைப்படுத்தல் சட்டத்தின் அடிப்படையில் மக்களை கைது செய்கின்றமை முக்கிய மையப்புள்ளியாகியிருக்கின்றத.

இதற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினர் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக சுகாதார சேவைகள் பணிப்பாளர் வெளியிட்ட வழிகாட்டுதல்களை பயன்படுத்தி அமைதியான முறையில் ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்பவர்களை கைது செய்வதற்கு பொலிஸார் எடுக்கும் நடவடிக்கையின் ஊடாக அடிப்படை உரிமைகள் மீறப்படுதவாக தீர்ப்பளிக்குமாறு அவர்கள் குறித்த மனுவின் ஊடாக கோரிக்கை விடுத்துள்ளனர்.அதிலும் இலங்கையின் முப்படைகளை தனது கட்டுப்பாட்டினில் வைத்திருக்கும் கோட்டபாய தொடர்பிலேயே கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளது.


No comments